எல்லோருக்கும் வணக்கம், எனக்கு கடந்த ஒரு மாதமாகதான் இந்த பிளாக்குகளை பற்றி தெரியும். எனக்கு நிறய கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள், புதினங்கள், புனைவுகள், அலசல்கள் எல்லாம் படிக்க மிகவும் பிடிக்கும். இவைகளை படிக்க இந்தியாவில் இருக்கும்போது புத்தகங்கள் மூலமாகத்தான் படிப்பேன். இங்கு சவுதி வந்த பிறகு இணையங்கள் மூலமாக முயற்சி செய்தேன்....... (நமக்கு இன்டெர்னெட் பத்தி அவ்வளவா விசயங்கள் தெரியாது....ஏதோ மெயில் படிப்பதோடு சரி) பிறகு இங்கு வரும் வார இதழ்களை படிப்பதோடு சரி. பிறகு எதேச்சயாக கூக்ளியில் தேடும்போது இந்த பிளாக்குக்ளை பற்றி தெரிந்தது. அப்புறம் காஞ்ச மாடு கம்புல பாஞ்சது மாதிரி ராத்திரி பகல்னு படிச்சேன் (படிச்சுகிட்டு இருக்கேன்) என்னால் முடிந்த அளவுக்கு படித்துகொண்டு வருகிறேன். எல்லாருடைய படைப்புகளும் நல்ல இனிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது. அப்புறமா நாமும் பின்னூட்டம் எழுதலாம்னு முயற்சி பன்னினேன்................இங்கிலீஸ்ல எழுத மனம் வரவில்லை. அதுக்கு இந்த தமிழ் ஃபான்ட் எங்க இருக்குன்னு தேடி கண்டுப்புடிச்சி இன்ஸ்ட்டால் பன்னுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயுடுச்சி.....இனிமேல் உங்க பதிவுகளை படிச்சி என்னோட பின்னூட்டத்த எழுதுறேன். நானும் பதிவுகள் எழுதனும்னு முயற்சி பன்னுகிறேன். நன்றி